சிஎஸ்கேவில் தீக்‌ஷனாவுக்குப் பதில் பதிரனா: டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு

டாஸ் வென்றிருந்தால், தாங்களும் பந்துவீச்சைத் தேர்வு செய்ய திட்டமிட்டிருந்ததாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் தெரிவித்தார்.
சிஎஸ்கேவில் தீக்‌ஷனாவுக்குப் பதில் பதிரனா: டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு
ANI

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஐபிஎல் போட்டியில் இன்று இரு ஆட்டங்கள். கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது.

இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்றிருந்தால், தாங்களும் பந்துவீச்சைத் தேர்வு செய்ய திட்டமிட்டிருந்ததாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் தெரிவித்தார். சிஎஸ்கேவில் தீக்‌ஷனாவுக்குப் பதில் பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளும் தலா 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், சிஎஸ்கே மூன்று ஆட்டங்களிலும், மும்பை இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சென்னைக்கு வெளியே நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் சிஎஸ்கே தோல்வியடைந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது.

முதல் மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த மும்பை அணி கடைசி இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிநடையைத் தக்கவைக்க வேண்டிய நெருக்கடியில் மும்பை களமிறங்கியுள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது மும்பைக்குக் கூடுதல் பலம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in