பிளேஆஃப் வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ்

இன்று நடைபெறும் பஞ்சாப் - ஆர்சிபி ஆட்டத்தில் தோல்வியடையும் அணி, 2-வது அணியாக ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறும்.
பிளேஆஃப் வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ்
பிளேஆஃப் வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ்ANI

நடப்பு ஐபிஎல் பருவத்திலிருந்து முதல் அணியாக வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்று நடைபெற்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களில் 167 ரன்களை விரட்டி அதிரடியான வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி 3-வது இடத்துக்கு முன்னேறியது.

8 புள்ளிகளை மட்டுமே எடுத்து 9-வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ளது. இந்த இரண்டு ஆட்டங்களை வென்றாலும் மும்பை அணிக்கு 12 புள்ளிகள் மட்டுமே இருக்கும்.

ஏற்கெனவே லக்னௌ, சிஎஸ்கே மற்றும் தில்லி அணிகள் 12 புள்ளிகளுடன் இருக்கின்றன. மே 14 அன்று லக்னௌ - தில்லி அணிகள் மோதும் ஆட்டத்திற்கு பிறகு ஏதேனும் ஒரு அணி 12 புள்ளிகளை தாண்டிவிடும் என்பதால் மும்பை அணியால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.

ஐபிஎல் போட்டியின் ஆரம்பமே மும்பை அணிக்கு சரியாக அமையவில்லை. முதல் 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த மும்பை அணி அடுத்த 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால், இதன் பிறகு 4 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து, தற்போது முதல் அணியாக வெளியேறியது.

கேப்டன் ஹார்திக் பாண்டியா முதல்முறையாக மும்பை அணியை வழிநடத்தினார். ஆனால், அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. கடைசியாக 2020-ல் கோப்பையை வென்ற மும்பை அணி 2021,2022 ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 2023-ல் குஜராத் அணிக்கு எதிரான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் வெளியேறியது மும்பை அணி.

நடப்பு ஐபிஎல்-ல் மும்பை அணியில் ஒருவர் கூட 400 ரன்களை தாண்டவில்லை. அதிகபட்சமாக திலக் வர்மா 384 ரன்களை எடுத்துள்ளார். கேப்டன் ஹார்திக் பாண்டியா 198 ரன்கள் அடித்து, 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை அணிக்கு ஒரேஒரு ஆறுதலாக அமைந்தது பும்ராவின் பந்துவீச்சு மட்டுமே. அவர் இதுவரை 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இன்று நடைபெறும் பஞ்சாப் - ஆர்சிபி ஆட்டத்தில் தோல்வியடையும் அணி 2-வது அணியாக ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in