ஆஸ்திரேலியாவில் சாய் சுதர்சன், படிக்கல் அபாரம்!

2-வது இன்னிங்ஸில் 120 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்திய ஏ அணி.
ஆஸ்திரேலியாவில் சாய் சுதர்சன், படிக்கல் அபாரம்!
@FoxCricket
1 min read

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் சுதர்சனும் கர்நாடக வீரர் படிக்கலும் அபாரமாக விளையாடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் மெக்கேவில் நடைபெற்றும் வரும் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான டெஸ்டில் இந்திய ஏ அணி வலுவான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் பிரெண்டன் டோகெட்டின் அபாரமான பந்துவீச்சில் இந்திய ஏ அணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக படிக்கல் 36 ரன்கள் எடுத்தார். டோகெட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் பிறகு முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய ஏ அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மெக்ஸ்வீனி 39 ரன்கள் எடுத்தார். முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் பிறகு 2-வது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய ஏ அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.

சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 96 ரன்களும், படிக்கல் 80 ரன்களும் எடுத்துள்ளனர். 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 120 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்திய ஏ அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in