கேப்டனாக மீண்டும் தோனி: டாஸ் வென்ற கேகேஆர் பந்துவீச்சு தேர்வு!

சிஎஸ்கேவில் ராகுல் திரிபாதி மற்றும் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாடுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், நடப்பு பருவத்திலிருந்து அவர் விலகியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை எம்எஸ் தோனி ஏற்றுள்ளார். 683 நாள்களுக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றிருக்கிறார் தோனி.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்கையே தேர்வு செய்யவிருந்ததாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார்.

சிஎஸ்கேவில் ருதுராஜ் கெயிக்வாட், முகேஷ் சௌதரி ஆகியோருக்குப் பதில் ராகுல் திரிபாதி மற்றும் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார்கள். கேகேஆரில் ஸ்பென்செர் ஜான்சனுக்குப் பதில் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை 235 ஆட்டங்களில் சிஎஸ்கேவை வழிநடத்தியுள்ளார் எம்எஸ் தோனி. இதில் 142 ஆட்டங்களில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in