ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து ஷமி விலகல்: தகவல்
ANI

ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து ஷமி விலகல்: தகவல்

பாண்டியா தற்போது மும்பை அணிக்கு மாறிவிட்டார். அடுத்ததாக, ஷமியும் குஜராத் அணியில் விளையாடப் போவதில்லை என்பது...
Published on

ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி விலகியுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

33 வயது ஷமி, கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் ஷமி. இதன் காரணமாக ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து ஷமி விலகவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அர்ஜுனா விருது பெற்ற ஷமி, இந்தியாவுக்காக 64 டெஸ்டுகள், 101 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 110 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷமி, குஜராத் அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த இரு வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியா தற்போது மும்பை அணிக்கு மாறிவிட்டார். அடுத்ததாக, ஷமியும் குஜராத் அணியில் விளையாடப் போவதில்லை என்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in