தினமும் ஒரு கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடாவிட்டால்..: ஷமி குறித்து அவரது நண்பர்

“ஷமியால் எதையும் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் ஆட்டிறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியாது”.
முஹமது ஷமி
முஹமது ஷமி@shubhankarmishraofficial
1 min read

முஹமது ஷமியால் தினமும் ஒரு கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியாது என்று அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.

இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஷமி. சமீபத்தில் ஷமி தனது பயிற்சியைத் தொடங்கினார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் யூடியூபர் ஷுபாங்கர் மிஸ்ராவுக்கு அளித்த பேட்டியில் ஷமியின் நெருங்கிய நண்பர் உமேஷ் குமார், “ஷமியால் தினமும் ஒரு கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியாது” என்றார்.

அவர் பேசியதாவது:

“தினமும் ஒரு கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடாமல் இருந்தால் ஷமியின் பந்துவீச்சில் மணிக்கு 15 கி.மீ வேகம் குறைந்துவிடும். ஷமியால் எதையும் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் ஆட்டிறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியாது. ஒரு நாள் பொறுமையாக இருப்பார், அடுத்த நாள் அவரது செயலில் மாற்றங்கள் தெரியும், 3-வது நாள் தன்னிலை இழந்துவிடுவார்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in