சாம்பியன்ஸ் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முஹமது நபி ஓய்வு!

ஐசிசியின் ஒருநாள் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் நபி.
சாம்பியன்ஸ் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முஹமது நபி ஓய்வு!
ANI
1 min read

2025 சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியுடன் ஆப்கானிஸ்தான் வீரர் முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

39 வயதான முஹமது நபி, 2009 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். நபி, இதுவரை 165 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 3549 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 171 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஐசிசியின் ஒருநாள் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் நபி.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என ஆப்கானிஸ்தான் வாரியத்தின் செயல் அதிகாரி நசீப் கான் கிரிக்பஸிடம் தெரிவித்துள்ளார்.

2019-ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற நபி, 2025 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு டி20-யில் மட்டும் விளையாடுவார் என்றும் நசீப் கான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in