பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பெற்ற முகமது அமிர்!

முகமது அமிர் கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
முகமது அமிர்
முகமது அமிர் ANI

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 18 அன்று தொடங்குகிறது.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் இடம்பெற்றுள்ளார். அமிர் கடைசியாக 2020-ல் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக, முகமது அமிர் கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில், “வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் விளையாட நான் தயாராக இருக்கிறேன். எனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறேன்” என்றார்.

இந்நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in