
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலின் இறுதிச் சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீ. தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக்ஸ் சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதிகம் எதிர்பார்த்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
“உங்களால் இந்தியா பெருமை கொள்கிறது.
தங்கம் வெல்லவிலை என்பதற்காக மனம் தளர வேண்டாம்.
நம் நாட்டு மக்களை மேலும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள்.
நள்ளிரவு ஒரு மணி ஆனாலும், நீங்கள் விளையாடியதை மக்கள் நம்பிக்கையுடன் பார்த்தனர்.
கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்காக பதக்கம் பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான்” என்றார்.
மேலும், நீரஜ் சோப்ராவின் காயம் குறித்தும், தங்கம் வென்ற அர்ஷத்தும் என் மகன் போன்றுதான் என்று நீரஜ் சோப்ராவின் தாய் பேசியது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.