ஒலிம்பிக் போட்டியிலிருந்து வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் நேற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, “ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் மிகச்சிறந்த உதாரணம்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவு
“வினேஷ், நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். உங்களால் இந்தியா பெருமை கொள்கிறது, மேலும் ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் ஒரு சிறந்த உதாரணம். தகுதி நீக்கம் செய்யப்பட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால், சவால்களை எதிர்கொள்வது உங்கள் இயல்பு, எனவே விரைவில் இதிலிருந்து மீண்டு வருவீர்கள்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.