நான் ஓய்வு பெறவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மில்லர்

மில்லர், 173 ஒருநாள் மற்றும் 125 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.
மில்லர்
மில்லர்ANI

இனிதான் சிறந்த ஆட்டத்தைப் பார்க்கப் போகிறீர்கள் என தெ.ஆ. வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மில்லர் சிறப்பான ஒரு ஷாட்டை அடிக்க எதிர்பாராத வகையில் அது கேட்சாக மாறியது. ஒரு வேளை அந்த பந்தில் சிக்ஸர் சென்றிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தப்பின் கடந்த சில நாள்களாக டேவிட் மில்லர் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, “நான் ஓய்வு பெறவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் தொடர்ந்து விளையாடுவேன். இனிமேல்தான் சிறந்த ஆட்டத்தைப் பார்க்கப் போகிறீர்கள்” என்று தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

2010 முதல் தெ.ஆ. அணிக்காக விளையாடி வரும் மில்லர் இதுவரை 173 ஒருநாள் மற்றும் 125 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in