ஐபிஎல்லுக்கு முன்னுரிமை: பிரபலங்கள் இல்லாத நியூசி. அணி!

மிட்செல் சான்ட்னர் இல்லாததால், மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லுக்கு முன்னுரிமை: பிரபலங்கள் இல்லாத நியூசி. அணி!
ANI
1 min read

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து முன்னணி வீரர்கள் விலகியுள்ளார்.

நியூசிலாந்து கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அதிரடி மாற்றங்களுடன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 மார்ச் 16-ல் நடைபெறுகிறது. டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பையில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் பாகிஸ்தான் டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மிட்செல் சான்ட்னர் இல்லாததால், மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மைக்கேல் பிரேஸ்வெல் ஏற்கெனவே கடந்தாண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் பயணத்தின்போது நியூசிலாந்தை வழிநடத்தியிருந்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்பு காயமடைந்த மேட் ஹென்றி கடைசி இரு டி20 ஆட்டங்களில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடிய கைல் ஜேமிசன், வில் ஓ ரூர்க் பணிச்சுமை காரணமாக முதல் மூன்று ஆட்டங்களில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

நியூசிலாந்தின் முன்னணி வீரர்களான டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் ஃபிளிப்ஸ், லாக்கி ஃபெர்குசன் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் ஐபிஎல் போட்டிக்கு முன்னுரிமை அளித்து அதில் விளையாடவுள்ளதால், பாகிஸ்தான் டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. கேன் வில்லியம்சன் பிஎஸ்எல் போட்டியில் பங்கேற்கவிருப்பதால் இவரும் பாகிஸ்தான் டி20 தொடரிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலென், மார்க் சேப்மேன், ஜேகப் டஃபி, ஸாக் ஃபோக்ஸ் (கடைசி இரு டி20), மிட்செல் ஹே, மேட் ஹென்றி (கடைசி இரு டி20), கைல் ஜேமிசன் (முதல் மூன்று டி20), டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், வில் ஓ ரூர்க் (முதல் மூன்று டி20), டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in