எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ரயில்வே, ஐஓசிஎல் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
95-வது அகில இந்திய எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் செப். 19 அன்று தொடங்கியது.
இதில் ரயில்வே மேம்பாட்டு வாரியம், இந்திய ராணுவம், தமிழ்நாடு ஹாக்கிப் பிரிவு, கர்நாடக ஹாக்கி அணி உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.
இந்நிலையில்ல் ரயில்வே மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதிச் சுற்று இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னதாக அரையிறுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ரயில்வே அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஒடிஷா அணியை வீழ்த்தியது. ரயில்வே அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோகிந்தர் சிங் 3 கோல்களை அடித்தார்.
இந்நிலையில் பலம் வாய்ந்த ரயில்வே, ஐஓசிஎல் அணிகள் இன்று இறுதிச் சுற்றில் மோதுகின்றன.
இப்போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 7 லட்சம் பரிசுத்தொகையும் 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்படவுள்ளன.