எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி: செப் 19-ல் தொடக்கம்!

இதில் ரயில்வே மேம்பாட்டு வாரியம், இந்திய ராணுவம், தமிழ்நாடு ஹாக்கிப் பிரிவு, கர்நாடக ஹாக்கி அணி உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி: செப் 19-ல் தொடக்கம்!
1 min read

எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வருகிற செப். 19 முதல் 29 வரை நடைபெறவுள்ளது.

95- வது அகில இந்திய எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 7 லட்சம் பரிசுத்தொகையும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்படவுள்ளன.

மேலும் சிறந்த முன்கள வீரர், சிறந்த மிட்ஃபீல்டர், சிறந்த கோல் கீப்பர், நம்பிக்கைக்குரிய வீரர் இறுதிச் சுற்றின் ஆட்ட நாயகன் ஆகியோருக்கு உயர்தர ஹெர்குலஸ் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.

இதில் ரயில்வே மேம்பாட்டு வாரியம், இந்திய ராணுவம், தமிழ்நாடு ஹாக்கிப் பிரிவு, கர்நாடக ஹாக்கி அணி உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவர் அருண் முருகப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in