பாரிஸ் ஒலிம்பிக்: தலைமை பொறுப்பிலிருந்து விலகிய மேரி கோம்

“தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பொறுப்பிலிருந்து விலகுகிறேன். இந்த முடிவை எடுத்ததால் வருந்துகிறேன்”.
மேரி கோம்
மேரி கோம்ANI

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய வீரர்கள் குழுவுக்கான தலைமை பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோம்.

6 முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோம். இவர் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மேரி கோமை தலைமை பொறுப்பில் நியமித்தது.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மேரி கோமுக்கு, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய வீரர்கள் குழுவுக்கான தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் மேரி கோம் தலைமை பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

“நாட்டுக்காக சேவை செய்வதை பெருமையாக நினைக்கிறேன். மனதளவில் அதுக்கு தயாராகவும் இருந்தேன். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பொறுப்பிலிருந்து விலகுகிறேன். இந்த முடிவை எடுத்ததால் வருந்துகிறேன்” என்றார்.

இது குறித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பிடி. உஷா, “ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற மேரி கோம் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த பொறுப்பிலிருந்து விலகுவது வருத்தமாக உள்ளது. இருந்தும் அவரின் தனியுரிமையை மதிக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in