ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் எம்பாப்பே!

2024 மே மாதம் வரை பிஎஸ்ஜி அணியில் விளையாடினார் எம்பாப்பே.
ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் எம்பாப்பே!
ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் எம்பாப்பே!@realmadriden
1 min read

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்பாப்பே இன்று ரியல் மாட்ரிட் அணியில் இணைந்துள்ளார்.

2016-ல் மொனாக்கோ அணியில் விளையாடி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் எம்பாப்பே. அவரின் சிறப்பான ஆட்டத்தால் அடுத்த ஆண்டே பிஎஸ்ஜி அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

2024 மே மாதம் வரை பிஎஸ்ஜி அணியில் விளையாடிய இவர் மொத்தமாக 175 கோல்களை அடித்து அசத்தினார். இதன் பிறகு இவர் ரியல் மாட்ரிட் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் அது உறுதியானது.

எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணியில் இணையப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. இந்நிலையில் இன்று 80000 ரசிகர்கள் முன்னிலையில் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் எம்பாப்பே. அவருக்கு ஜெர்ஸி எண் 9 வழங்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in