தனக்குப் பதிலாக வேறு வீரரைத் தேர்வு செய்யச் சொன்ன மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல் இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்ANI

சன்ரைசர்ஸ் ஆட்டத்திற்கு முன்பு தனக்கு பதிலாக வேறு வீரரை தேர்வு செய்யுமாறு ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸியிடம் கேட்டுக் கொண்டதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் பெங்களூருவில் விளையாடின. இதில் சன்ரைசர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஐபிஎல் 2024-ல் மேக்ஸ்வெல் இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்நிலையில் மேக்ஸ்வெல், “எனக்கு பதிலாக வேறு வீரரை தேர்வு செய்யுமாறு டு பிளெஸ்ஸியிடம் கேட்டுக் கொண்டேன்” என பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“எனக்கு இது மிகவும் சுலபமான முடிவு. கடந்த ஆட்டம் முடிந்தவுடன் டு பிளெஸ்ஸி மற்றும் பயிற்சியாளர்களிடம் எனக்கு பதிலாக வேறு வீரரை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். நான் மனதளவிலும், உடல் ரீதியாகவும் சிறிது ஓய்வு எடுக்க, இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

மீண்டும் நான் விளையாட வேண்டும் என்ற சூழல் ஏற்படுவதற்கு முன்பு, நான் முழு உடற்தகுதியுடன் திரும்ப முடியும் என நம்புகிறேன். எங்கள் அணியில் பவர் பிளேவுக்குப் பிறகு விளையாடுவதில் பெரிய குறைபாடு உள்ளது. அந்த சூழலில் விளையாடுவது தான் எனது பலம்.

பேட்டிங்கில் நான் நம்பிக்கையளிக்கும் பங்களிப்புகளை அளிக்கவில்லை. அதனால் தான் எனக்கு பதிலாக வேறு வீரரை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கிறேன்.

இதுபோன்ற ஒரு தருணத்தில் நான் போட்டியிலிருந்து விலகுவது வருத்தமாக உள்ளது. ஆனால், உடலளவிலும் மனதளவிலும் நல்ல நிலைக்குத் திரும்பி, மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், ஐபிஎல் போட்டியைச் சிறப்பாக நிறைவு செய்வேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in