இங்கிலாந்து வெள்ளைப்பந்து பயிற்சியாளர் மேத்யூ மாட் விலகல்!

இவரது தலைமையில் இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக் கோப்பையை வென்றது.
மேத்யூ மாட்
மேத்யூ மாட்
1 min read

இங்கிலாந்து வெள்ளைப்பந்து பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மாட் விலகியுள்ளார்.

கடந்த மே 2022-ல் இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளராக மேத்யூ மாட் பொறுப்பேற்றார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக் கோப்பையை வென்றது.

ஆனால், அதன் பிறகு 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் லீக் சுற்றுடனும், 2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சுற்றுடனும் வெளியேறியது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மேத்யூ மாட் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக துணைப் பயிற்சியாளராக இருந்த மார்கஸ் டிரெஸ்கோதிக் இப்பொறுப்பை தற்காலிகமாக ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பயிற்சியாளர் பதவிக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் ஃபிளிண்டாஃப், மைக் ஹஸ்ஸி, குமார் சங்கக்காரா ஆகியோரை அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி 100’ போட்டியில் தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றி வரும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மார்கனிடம் இது குறித்து கேட்டபோது, “இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க இது சரியான நேரம் இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in