காபா டெஸ்டில் ஜோ ரூட் சதம்: தப்பித்தார் ஹேடன்! | Joe Root | Matthew Hayden | Ashes |

ஆஷஸ் தொடரில் சதமடிக்காவிட்டால், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாகச் சுற்றி வருவேன் என ஹேடன் தெரிவித்திருந்தார்.
Matthew Hayden saved: Joe Root scored his 1st century in Australia in Gabba Day Night Ashes Test
ஆஷஸ்: காபா பகலிரவு டெஸ்டில் சதமடித்தார் ஜோ ரூட்படம்: https://x.com/ICC
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபா பகலிரவு டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதமடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் காபாவில் பகலிரவு டெஸ்டாக நடைபெற்று வருகிறது. ஆஷஸ் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் பாட்காஸ்ட் ஒன்றில் பேசும்போது ஒரு சவால் அளித்திருந்தார்.

ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாகச் சுற்றி வருவேன் என ஹேடன் தெரிவித்திருந்தார். காரணம், இந்த ஆஷஸ் தொடருக்கு முன்பு வரை ஜோ ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம்கூட அடித்ததில்லை. மேத்யூ ஹேடனின் இந்தக் கருத்து உலகளவில் பிரபலமானது. மேத்யூ ஹேடனின் மகள் கிரேஸ், சமூக ஊடகப் பக்கத்தில் தயவுசெய்து சதமடித்துவிடுங்கள் ரூட் என்று பதிவிட்டிருந்தார்.

பெர்த்தில் ஆஷஸ் முதல் டெஸ்ட் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸிலும் முறையே 0, 8 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார் ஜோ ரூட்.

இந்த நிலையில், இரண்டாவது ஆஷஸ் ஆட்டம் காபாவில் பகலிரவு டெஸ்டாக இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தனது பாணியிலான நிதான ஆட்டத்தைக் கடைபிடித்த ஜோ ரூட், டெஸ்டில் 40-வது சதத்தை அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட்டுக்கு இது முதல் சதம்.

ஜோ ரூட் சதமடித்ததன் மூலம், மேத்யூ ஹேடன் தான் சொன்னதைச் செய்ய வேண்டிய தேவையில்லை. சமூக ஊடகங்களில் ஜோ ரூட்டுக்கு இணையாக மேத்யூ ஹேடனும் பேசுபொருளாகியுள்ளார். ஹேடனின் கண்ணியம் காக்கப்பட்டதாகவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

சதத்தைத் தொடர்ந்து, ஜோ ரூட்டுக்கு மேத்யூ ஹேடன் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 135 ரன்களுடனும் ஜோஃப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Summary

Matthew Hayden saved: Joe Root scored his 1st century in Australia in Gabba Day Night Ashes Test

Ashes | Joe Root | Matthew Hayden | Aus vs Eng | AUS v ENG | Australia vs England | Australia v England | Gabba Test | Day Night Test | Zak Crawley | Mitchell Starc | Jofra Archer |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in