பதிரனா
பதிரனாANI

காயம்: மீண்டும் இலங்கை சென்றார் பதிரனா

பதிரனா இந்த ஐபிஎல்-ல் 6 ஆட்டங்களில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Published on

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பதிரனா காயம் காரணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் 52 ஆட்டங்கள் முடிவடைந்தன. சிஎஸ்கே அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பதிரனா காயம் காரணமாக இலங்கைக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் உலகக் கோப்பைக்கான விசா தொடர்புடைய வேலையாக இலங்கை சென்றார்.

இது குறித்து சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தசைப்பிடிப்பால் பதிரனா இலங்கைக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அணிக்கு திரும்புவது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் பஞ்சாபுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே தீபக் சஹார், முஸ்தஃபிஸுர் ஆகியோர் விலகிய நிலையில் பதிரனாவும் அணிக்கு திரும்பவில்லை என்றால், அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும்.

பதிரான இந்த ஐபிஎல்-ல் 6 ஆட்டங்களில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in