சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்று: ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை
இறுதிச் சுற்று: ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ANI
1 min read

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் துபாயில் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. இதற்கான நடுவர்கள் அடங்கிய விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

கள நடுவர்களாக பால் ரெய்ஃபில் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜோயல் வில்சன் மூன்றாவது நடுவராகச் செயல்படவுள்ளார். நான்காவது நடுவராக குமார் தர்மசேனா செயல்படுகிறார். ஆட்ட நடுவராக ரஞ்சன் மதுகலே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பால் ரெய்ஃபில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து இடையே லாகூரில் நடைபெற்ற அரையிறுதியில் கள நடுவராக இருந்தார். இதில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

ரிச்சர்ட் இல்லிங்வொர்த் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான அரையிறுதியில் கள நடுவராக இருந்தார். இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசியின் சிறந்த நடுவர் என்ற விருதை 4 முறை வென்றுள்ள ரிச்சர்ட் இல்லிங்வொர்த் 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுகளில் கள நடுவராக இருந்தார். லீக் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஆட்டத்தின்போதும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் கள நடுவராக இருந்தார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றில் ஏற்கெனவே துபாயில் மோதின. அப்போது, இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in