ஐசிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற மேஜர் லீக் கிரிக்கெட்

2-வது மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூலை 5 முதல் நடைபெறவுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட்
மேஜர் லீக் கிரிக்கெட்@MINYCricket
1 min read

அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு ஐசிசியின் லிஸ்ட் ஏ அந்தஸ்து கிடைத்துள்ளது.

மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டில் அறிமுகம் ஆனது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் எம் ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றது. 2-வது மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூலை 5 முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு ஐசிசியின் லிஸ்ட் ஏ அந்தஸ்து கிடைத்துள்ளது. முன்னதாக துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 போட்டிக்கு ஐசிசியின் லிஸ்ட் ஏ அந்தஸ்து கிடைத்தது. இதைத் தொடர்ந்து இனி மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி அதிகாரபூர்வமான டி20 லீக் என அங்கீகரிக்கப்படும்.

இந்நிலையில் தற்போது 6 அணிகள் மட்டுமே பங்கேற்கும் நிலையில் இனி வரும் ஆண்டுகளில் அதனை 10 அணிகளாக அதிகரிக்கவும் மேலும், இனி 34 ஆட்டங்களை நடத்தவும் மேஜர் லீக் கிரிக்கெட் நிர்வாகம் முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in