இந்திய அணிக்கு ரூ. 11 கோடி பரிசுத்தொகை: மஹாராஷ்டிர முதல்வர் அறிவிப்பு

மஹாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெயிஸ்வால்
மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
1 min read

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 11 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று இந்தியா வந்தடைந்தது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த இந்திய அணி, மாலை மும்பையில் வெற்றிப் பேரணி மேற்கொண்டது. தொடர்ந்து, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ அறிவித்த ரூ. 125 கோடி பரிசுத்தொகை இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெயிஸ்வால் ஆகியோரை அழைத்து கௌரவித்தார். மஹாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் இந்திய வீரர்களைக் கௌரவித்தார்கள்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 11 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in