சென்னை ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ரசிப்பார்கள்: கேஎல் ராகுல்

"சென்னையில் ரசிகர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்."
சென்னை ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ரசிப்பார்கள்: கேஎல் ராகுல்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ரசிப்பார்கள் என்று ராகுல் தெரிவித்தார்.

சென்னை ரசிகர்கள் குறித்து அவர் கூறியதாவது:

"சென்னையில் ரசிகர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். நான் இங்கு நிறைய விளையாடியிருக்கிறேன். நல்ல கிரிக்கெட்டை அவர்கள் ரசிப்பார்கள். சொந்த அணிக்கான ஆதரவு அதிகமாகவே இருக்கும். எனினும், எதிரணி நன்றாக விளையாடினால், அவர்களையும் ரசிப்பார்கள்" என்றார் ராகுல்.

இந்தப் பருவத்தில் 7-வது முறையாக டாஸ் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ருதுராஜ் கெயிக்வாட், அணியில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார். ரச்சின் ரவீந்திராவுக்குப் பதில் டேரில் மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளும் தங்களுடைய முந்தைய ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லக்னௌ 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்று 4 (சிஎஸ்கே) மற்றும் 5-வது (லக்னௌ) இடத்தில் உள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in