நடுவர் சர்ச்சை: லார்ட்ஸ் டெஸ்டில் திருத்தி எழுதப்பட்ட தீர்ப்புகள்! | Lord's Test

நடுவர் ஷர்ஃபுத்தெளலா இந்தியாவுக்கு எதிராக 3 முடிவுகளைக் கொடுத்துள்ளார். மூன்றும் டிஆர்எஸ் மூலம் திரும்பப் பெற்றப்பட்டன.
நடுவர் பால் ரைஃபில்
நடுவர் பால் ரைஃபில்REUTERS
2 min read

லார்ட்ஸ் டெஸ்டில் நடுவர்களின் முடிவு சர்ச்சையான நிலையில், நடுவர்கள் அளித்த முடிவுகள் பற்றிய தரவுகள் கிடைத்துள்ளன.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்தியா 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலிரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில், லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி கடைசி நாள் கடைசிப் பகுதியில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் நடுவர் பால் ரைஃபிலின் முடிவுகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததாகச் சர்ச்சைகளும் புகார்களும் எழுந்தன.

இந்திய முன்னாள் வீரர் ஆர் அஸ்வின், அஷ் கி பாத் யூடியூப் சேனலில் பேசுகையில், "இந்தியா எப்போது பந்துவீசினாலும் அது அவுட் இல்லை என்றே நடுவர் பால் ரைஃபில் நினைப்பார். இந்தியா எப்போது பேட் செய்தாலும் அது அவுட் என்றே அவர் நினைப்பார். இந்தியாவுக்கு எதிராக மட்டுமில்லாமல் எல்லா அணிகளுக்கு எதிராகவும் இதுதான் நிலை என்றால், ஐசிசி இதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

கடந்தாண்டு நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போதும், பால் ரைஃபிலின் முடிவுகள் பற்றி விமர்சனத்தை எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்டில் நடுவர்கள் முடிவு என்னவாக இருந்தது, டிஆர்எஸ் எடுத்தவுடன் இறுதி முடிவு என்ன ஆனது என்பது பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

பால் ரைஃபில் நடுவராக இருந்தபோது, பந்துவீச்சில் இந்திய அணி 6 முறை டிஆர்எஸ் முறையீட்டுக்குச் சென்றது.

பேட்டர் - பென் ஸ்டோக்ஸ்

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட் இல்லை

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை (அம்பயர்ஸ் கால்)

பேட்டர் - கிறிஸ் வோக்ஸ்

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட் இல்லை

  • டிஆர்எஸ் முடிவு - அவுட்

பேட்டர் - ஸாக் கிராலி

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட் இல்லை

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை

பேட்டர் - ஆலி போப்

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட் இல்லை

  • டிஆர்எஸ் முடிவு - அவுட்

பேட்டர் - ஜோ ரூட்

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட் இல்லை

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை (அம்பயர்ஸ் கால்)

பேட்டர் - ஜோஃப்ரா ஆர்ச்சர்

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட் இல்லை

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை

பால் ரைஃபில் நடுவராக இருந்தபோது, பேட்டிங்கில் இந்திய அணி 6 முறை டிஆர்எஸ் முறையீட்டுக்குச் சென்றது.

பேட்டர் - கருண் நாயர்

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட்

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை

பேட்டர் - ஷுப்மன் கில்

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட்

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை

பேட்டர் - ஷுப்மன் கில்

  • பால் ரைஃபில் கொடுத்த முடிவு - அவுட்

  • டிஆர்எஸ் முடிவு - அவுட்

தரவுகள்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்ஃபோ

ஷர்ஃபுத்தெளலா நடுவராக இருந்தபோது, பேட்டிங்கில் இந்திய அணி 3 முறை டிஆர்எஸ் முறையீட்டுக்குச் சென்றது.

பேட்டர் - ஆகாஷ் தீப்

  • ஷர்ஃபுத்தெளலா கொடுத்த முடிவு - அவுட்

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை

பேட்டர் - ஆகாஷ் தீப்

  • ஷர்ஃபுத்தெளலா கொடுத்த முடிவு - அவுட்

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை

பேட்டர் - ரவீந்திர ஜடேஜா

  • ஷர்ஃபுத்தெளலா கொடுத்த முடிவு - அவுட்

  • டிஆர்எஸ் முடிவு - அவுட் இல்லை

தரவுகள்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்ஃபோ

Ind vs Eng | Ind v Eng | India vs England | India v England| Lord's Test | Paul Reiffel | Sharfuddoula | DRS | Umpire's Call | Umpire's Decision

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in