ரூ. 66 கோடி வருமான வரி கட்டிய விராட் கோலி!: மற்ற வீரர்கள்?

இப்பட்டியலில் ரூ. 92 கோடி வரி செலுத்திய ஷாருக் கான் முதலிடத்தில் உள்ளார்.
விராட் கோலி
விராட் கோலிANI
1 min read

அதிக வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

2024-ல் அதிக வரி செலுத்திய இந்தியப் பிரபலங்களின் பட்டியலை ஃபார்ச்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் ரூ. 92 கோடி வரி செலுத்தி நடிகர் ஷாருக் கான் முதலிடத்தில் உள்ளார்.

அடுத்ததாக நடிகர் விஜய் ரூ. 80 கோடி வரி செலுத்தி 2-வது இடத்தில் உள்ளார். விஜய்க்கு அடுத்ததாக சல்மான் கான் 3-வது இடத்திலும், அமிதாப் பச்சன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக வரி செலுத்தியவராக விராட் கோலி உள்ளார். ரூ. 66 கோடி வரி செலுத்தி இப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

இப்பட்டியலில் தோனி 7-வது இடத்தையும், சச்சின் 9-வது இடத்தையும், கங்குலி 12-வது இடத்தையும், ஹார்திக் பாண்டியா 17-வது இடத்தையும் பிடித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in