
டெஸ்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை நோக்கி மிகவேகமாக முன்னேறி கொண்டிருக்கிறார் ஜோ ரூட்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.
இவர், 200 டெஸ்டில், 51 சதங்கள் உள்பட 15,921 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 5-வது இடத்தில் உள்ளார். இவர் 151 டெஸ்டில், 36 சதங்கள் உள்பட 12,886 ரன்கள் எடுத்துள்ளார்.
பாண்டிங் (13,378 ரன்கள்), காலிஸ் (13,289 ரன்கள்), டிராவிட் (13,288 ரன்கள்) ஆகியோர் முறையே 2 முதல் 4-வது இடங்களில் உள்ளனர்.
இதில், ஜோ ரூட் மட்டுமே தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு வயது 33. இந்நிலையில் டெஸ்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை நோக்கி மிகவேகமாக முன்னேறி கொண்டிருக்கிறார் ஜோ ரூட்.
2-வது இடத்துக்கு முன்னேற ரூட்டுக்கு இன்னும் 493 ரன்களே தேவைப்படுகிறது. முதல் இடத்தை பிடிக்க 3036 ரன்கள் தேவைப்படும் நிலையில் அவர் முதலிடத்தையும் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.