நில ஆக்கிரமிப்பு: யூசுஃப் பதானுக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிமன்றம்! | Yusuf Pathan |

2024 மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் யூசுஃப் பதான்.
நில ஆக்கிரமிப்பு: யூசுஃப் பதானுக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிமன்றம்! | Yusuf Pathan |
1 min read

குஜராத் மாநிலம் வதோதராவில் குடியிருப்புப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானுக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை கடந்த 2012 முதல் யூசுஃப் பதான் ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சந்தை மதிப்புக்கு நிகரான விலை கொடுத்து அந்த நிலத்தை வாங்க வதோதரா நகராட்சியை அணுகினார் யூசுஃப் பதான். வதோதரா நகராட்சி சம்பந்தப்பட்ட இடத்தை மதிப்பீடு செய்து பார்த்து, 2014-ல் யூசுஃப் பதானின் கோரிக்கையை நிராகரித்தது. இருந்தபோதிலும், அந்த நிலத்தை அவர் ஆக்கிரமித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பதான். இதன்பிறகு, இந்தப் பிரச்னை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. 2024-ல் சம்பந்தப்பட்ட அரசு நிலத்தைக் காலி செய்யுமாறு வதோதரா நகராட்சி சார்பில் யூசுஃப் பதானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார் யூசுஃப் பதான். நீதிபதி மௌனா பட் வழக்கை விசாரித்தார்.

யூசுஃப் பதானின் மனுவை தனி நீதிபதி நிராகரித்துள்ளார். இதன்மூலம், அரசு நிலத்தை யூசுஃப் பதான் ஆக்கிரமித்துள்ளார் என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்துகிறது. ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு தனி நீதிபதி மௌனா பட் தீர்ப்பளித்துள்ளார்.

"நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக சட்டத்தைப் பின்பற்றுவது பதானின் பொறுப்பு. புகழ்பெற்றவர் என்பதற்காக பதானுக்குக் கரிசனம் காட்ட முடியாது. பதானுக்கு எந்த மாதிரியான கரிசனத்தைக் காட்டினாலும் அது சமுதாயத்துக்குத் தவறான செய்தியையே உணர்த்தும்" என்றார் தனி நீதிபதி மௌனா பட்.

Yusuf Pathan | Enroachment | Land | Gujarat High Court | Vadodara | Vadodara Municipal Corporation |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in