
இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பிஜிடி தொடரில் மூன்று டெஸ்டுகள் முடிவடைந்துள்ளன. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் டிசம்பர் 26 அன்று மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடைசி இரு டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மூன்று டெஸ்டுகளில் விளையாடிய நேதன் மெக்ஸ்வீனி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக 19 வயது சாம் கோன்ஸ்டஸ் (Sam Konstas) புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்திய அணி விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் சதமடித்து கவனம் பெற்றார் சாம் கோன்ஸ்டஸ்.
மேலும் காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் தொடரிலிருந்து விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக ஜை ரிச்சர்ட்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். எனினும் 2-வது டெஸ்டில் விளையாடிய ஸ்காட் போலண்ட், 4-வது டெஸ்டிலும் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4-வது டெஸ்டில் நேரடியாக சேம் கோன்ஸ்டஸ் தொடக்க வீரராகக் களமிறங்குவாரா அல்லது ஏற்கெனவே அணியில் உள்ள ஜோஷ் இங்க்லிஷ் அணியில் இடம்பிடிப்பார் என்பது சில நாள்களில் தெரிந்துவிடும்.