ஓய்வு பெறுவதாகச் சொன்னபோது...: அஸ்வின் குறித்து மனம் உருகிய கோலி!

கோலி, புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
ஓய்வு பெறுவதாகச் சொன்னபோது...: அஸ்வின் குறித்து மனம் உருகிய கோலி!
ANI
1 min read

அஸ்வின் ஓய்வு பெறுவதாக சொன்னபோது, சற்று உணர்ச்சிவயப்பட்டதாக விராட் கோலி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவருடைய ஓய்வு முடிவு பலருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. இருந்தாலும், இவருடைய முடிவுக்கு மதிப்பளித்து அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

விராட் கோலி

"இணைந்து 14 வருடங்கள் விளையாடியுள்ளேன். ஓய்வு பெறுவதாக இன்று என்னிடம் சொன்னபோது, அது என்னைச் சற்று உணர்ச்சிவயப்படச் செய்தது. இணைந்து விளையாடிய தருணங்கள் அனைத்தும் கண்முன் வந்து சென்றன.

உன்னுடனான பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவித்திருக்கிறேன். இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு நீ செலுத்திய பங்களிப்பும் உன்னுடையத் திறனும் எவர் ஒருவருடனும் ஒப்பிட முடியாதவை. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாகவே நீ எப்போதும் அறியப்படுவாய்.

அனைத்துக்கும் நன்றி."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in