தென்னாப்பிரிக்க மத்திய ஒப்பந்தத்தில் கிளாஸென் இல்லை!

"கிளாஸெனின் எதிர்காலம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. உரிய நேரத்தில் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்."
தென்னாப்பிரிக்க மத்திய ஒப்பந்தத்தில் கிளாஸென் இல்லை!
ANI
1 min read

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் ஹெயின்ரிக் கிளாஸென் இல்லாதது அவருடைய சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. டேவிட் மில்லர் மற்றும் ரசி வான்டர் டுசன் ஹைபிரிட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட சில தொடர்கள் மற்றும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே இருவரும் பங்கெடுப்பார்கள்.

க்வெனா மகாபா, லிஸாத் வில்லியம்ஸ், முத்துசாமி உள்ளிட்டோர் மத்திய ஒப்பந்தத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஹெயின்ரிக் கிளாஸென், தப்ரைஸ் ஷம்ஸி, ஃபார்ச்சூன் மற்றும் ஃபெலுவாயோ உள்ளிட்டோர் ஒப்பந்தத்தில் தக்கவைக்கப்படவில்லை. கடந்த பருவத்தில் வெள்ளைப் பந்து ஒப்பந்தத்தில் மட்டுமே அவர் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது முற்றிலுமாக ஒப்பந்தத்தில் தக்கவைக்கப்படாமல் உள்ளார். கிளாஸென் பற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறுகையில், "கிளாஸெனின் எதிர்காலம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. உரிய நேரத்தில் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் டெம்பா பவுமா, டி20 கேப்டன் எய்டன் மார்க்ரம், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, ஜெரால்டு கூட்ஸியா, மார்கோ யான்சென் மற்றும் கேஷவ் மஹாராஜ் உள்ளிட்டோர் ஒப்பந்தப் பட்டியலில் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். டோனி ஸார்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரயன் ரிக்கெல்டன் உள்ளிட்ட இளம் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் உள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in