தோனியின் வழியில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கெதர் ஜாதவ்

கடைசியாக 2020-ல் இந்திய அணிக்காக விளையாடினார்.
கெதர் ஜாதவ்
கெதர் ஜாதவ்@kedarjadhavofficial

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் கெதர் ஜாதவ் அறிவித்துள்ளார்.

2014-ல் இந்திய அணியில் அறிமுகமான கெதர் ஜாதவ் 73 ஒருநாள் மட்டும் 9 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 6 அரைசதம், 2 சதம் உட்பட 1389 ரன்களும், டி20 ஆட்டங்களில் 122 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

கடைசியாக 2020-ல் இந்திய அணிக்காக விளையாடிய இவர், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தோனி தனது ஓய்வு அறிவிப்பை எவ்வாறு வெளியிட்டாரோ அதே போல, கெதர் ஜாதவும் தான் விளையாடிய புகைப்படங்களை காணொளியாகப் பகிர்ந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் தில்லி, ஆர்சிபி, கொச்சி டஸ்கர்ஸ், சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் என 5 அணிகளுக்காக விளையாடிய இவர் 95 ஆட்டங்களில் 4 அரைசதம் உட்பட 1208 ரன்கள் எடுத்துள்ளார்.

2018 முதல் 2020 வரை சிஎஸ்கே அணியில் விளையாடிய கெதர் ஜாதவ் 23 ஆட்டங்களில் பங்கேற்று ஒரு அரைசதத்துடன் 248 ரன்களை அடித்தார்.

87 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 17 சதம், 23 அரைசதம் உட்பட 6100 ரன்களை அடித்துள்ளார்.

இந்நிலையில் கெதர் ஜாதவ் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in