சோகம் வேண்டாம்: காவ்யா மாறன் அறிவுரை

"டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முறையை மாற்றியிருக்கிறீர்கள். எல்லோரும் நம்மைப் பற்றி பேசுகிறார்கள்".
காவ்யா மாறன்
காவ்யா மாறன்@SunRisers

நாம் இறுதிச் சுற்றில் விளையாடியுள்ளோம். இதுபோல சோகமாக இருக்காதீர்கள் என சன்ரைசர்ஸ் அணி வீரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் காவ்யா மாறன் பேசியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை மிக எளிதாக வென்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றது கேகேஆர் அணி. இந்நிலையில் ஆட்டத்திற்குப் பிறகு வீரர்களைச் சந்தித்த அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாறன், இதுபோல சோகமாக இருக்காதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.

காவ்யா மாறன் பேசியதாவது:

"நீங்கள் அனைவரும் விளையாடிய விதம் எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முறையை மாற்றியிருக்கிறீர்கள். எல்லோரும் நம்மைப் பற்றி பேசுகிறார்கள். கேகேஆர் அணி இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றாலும், அனைவரும் நம்மைப் பற்றி பேசுகிறார்கள். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். இறுதிச் சுற்று நடைபெற்ற நாள் நமது நாளாக அமையவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நாம் கடைசி இடத்தில் முடித்திருந்தாலும், ரசிகர்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையில் தொடர்ந்து ஆதரவு அளித்தனர். நாம் இறுதிச் சுற்றில் விளையாடியுள்ளோம். இதுபோல சோகமாக இருக்காதீர்கள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in