இந்திய கோல்ஃப் சங்கத்தின் தலைவராக கபில் தேவ் தேர்வு

கடந்த 30 ஆண்டுகளாக கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்...
கபில் தேவ்
கபில் தேவ் @therealkapildev

இந்தியத் தொழில்முறை கோல்ஃப் சங்கத்தின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கோல்ஃப் வீரர்களுக்கான உருவாக்கப்பட்டுள்ள சங்கம் - இந்தியத் தொழில்முறை கோல்ஃப் சங்கம் (Professional Golf Tour of India, PGTI). 2006 முதல் செயல்பட்டு வரும் இந்தச் சங்கத்தின் தலைவராக கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக கோல்ஃப் விளையாட்டில் கபில் தேவ் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது தனக்கு கௌரவமாக இருப்பதாகவும், இனி அதிகமான நேரத்தை தனது கோல்ஃப் நண்பர்களுடன் செலவழிப்பேன் என்றும் கபில் தேவ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in