20 வயதில் காலமான கவுண்டி கிரிக்கெட் வீரர்

மே 1 அன்று கடைசியாக இவர் விளையாடிய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து அடுத்த நாளில் இந்த சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
ஜோஷ் பேக்கர்
ஜோஷ் பேக்கர்
1 min read

வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் 20 வயதில் காலமானதாக அந்த அணி நேற்று அறிவித்துள்ளது.

ஜோஷ் பேக்கர் இறப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த செய்தி அனைவரையும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது எனவும் இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினர் சார்பாக அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் அந்த அணியின் தலைமை நிர்வாகி ஆஷ்லே கில்ஸ் கூறியுள்ளார்.

மே 1 அன்று கடைசியாக இவர் விளையாடிய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து அடுத்த நாளில் இந்த சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

17 வயதிலேயே கவுண்டி அணியுடன் தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பேக்கர் 2021 முதல் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார். 22 முதல்தர ஆட்டங்களில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in