இந்தியாவுடனான 2-வது டெஸ்ட்: இங்கி. அணியில் ஆர்ச்சர்!

இரு அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் பிர்மிங்காமில் ஜூலை 2 அன்று தொடங்குகிறது.
இந்தியாவுடனான 2-வது டெஸ்ட்: இங்கி. அணியில் ஆர்ச்சர்!
REUTERS
1 min read

இந்தியாவுடனான 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்தியா 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் லீட்ஸில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தான வெற்றியைப் பெற்றது. இரு அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் பிர்மிங்காமில் ஜூலை 2 அன்று தொடங்குகிறது.

இதற்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்ச்சர் சேர்க்கப்பட்டது தவிர முதல் டெஸ்டிலிருந்து வேறு எந்த மாற்றத்தையும் இங்கிலாந்து செய்யவில்லை. பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்படாமல் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ள நிலையில், 6-வது வேகப்பந்துவீச்சாளராக அணியில் இணைந்துள்ளார் ஆர்ச்சர்.

2021-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் அணியில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து குணமடைந்த ஆர்ச்சர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே பெரும்பாலும் விளையாடி வந்தார். முதல் தர கிரிக்கெட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுன்டியில் கடந்த 22 அன்று டர்ஹம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சசக்ஸுக்காக விளையாடினார். முதல் இன்னிங்ஸில் 18 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராலே, பென் டக்கெட், ஆலி போப், ஜேக்கப் பெத்தெல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஜாஷ் டங், சாம் குக், ஷோயப் பஷீர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in