பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக பதக்கம் வென்ற கர்ப்பிணி என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜோடி கிரின்ஹம்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இதில் மகளிர் வில்வித்தை வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனின் ஜோடி கிரின்ஹம் வெற்றி பெற்றார்.
7 மாத கர்ப்பிணியாக பாராலிம்பிக்ஸில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் ஜோடி கிரின்ஹம்.
பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக பதக்கம் வென்ற கர்ப்பிணி என்ற சாதனையைப் இவர் படைத்துள்ளார்.
பதக்கத்தை வென்ற பிறகு, “கர்ப்பிணி ஒருவர் பாராலிம்பிக்ஸ் கலந்து கொள்கிறார் என்பதை விட, கர்ப்பிணி ஒருவர் பாராலிம்பிக்ஸில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் என்று அனைவரும் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சாதிக்க எந்த ஒரு விஷயமும் தடையில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போட்டியில் கலந்து கொண்டேன்” என்று ஜோடி கிரின்ஹம் பேசியுள்ளார்.