கடைசி ஆட்டம்: பஞ்சாப் கேப்டனாக ஜிதேஷ் சர்மா நியமனம்!

கடைசி ஆட்டம்: பஞ்சாப் கேப்டனாக ஜிதேஷ் சர்மா நியமனம்!

ஷிகர் தவன், சாம் கரன் இல்லாததால் ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை ஜிதேஷ் சர்மா வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை நாளை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன் காயம் காரணமாக வெறும் 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.

இவர் இல்லாததால், சாம் கரன் அணியை வழிநடத்தி வந்தார். இவரும் பாகிஸ்தான் தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், நேதன் எல்லிஸ் மற்றும் ரைலி ரூசோவ் மட்டுமே அணியில் வெளிநாட்டு வீரர்களாக உள்ளார்கள். கடைசி ஆட்டத்தில் யார் அணியை வழிநடத்தவுள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிதேஷ் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கோப்பை அறிமுகத்தின்போது அனைத்து கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஷிகர் தவன் காயம் காரணமாக இதில் பங்கெடுக்கவில்லை. இதனால், பஞ்சாப் அணி சார்பாக ஜிதேஷ் சர்மா கலந்துகொண்டார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

ஜிதேஷ் சர்மாவுக்கு இந்த ஐபிஎல் சிறப்பானதாக அமையவில்லை. 13 ஆட்டங்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 14.09. ஸ்டிரைக் ரேட் 122.05.

logo
Kizhakku News
kizhakkunews.in