
ஐபிஎல் 2025 போட்டி தொடங்க இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், ஜியோஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகையை அறிவித்துள்ளது ஜியோ.
ஐபிஎல் 2025 வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கொல்கத்தாவில் விளையாடுகின்றன. இந்தப் போட்டி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது.
ஐபிஎல் போட்டியை ஓடிடியில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ஜியோசினிமா 2023-ல் 5 ஆண்டுகளுக்குக் கைப்பற்றியது. கடந்த காலங்களில் ஐபிஎல் போட்டி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதனிடையே ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்தியப் பிரிவு கடந்தாண்டு ஒன்றிணைந்தன. இதனால் ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் இணைந்து ஜியோஹாட்ஸ்டார் ஆனது.
இந்நிலையில், முந்தைய ஆண்டுகளைப்போல எல்லா ரசிகர்களாலும் ஐபிஎல் போட்டியை ரசிகர்களால் இலவசமாகப் பார்க்க முடியாது. ஜியோ சிம், ஜியோஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் பயனாளர்களுக்கு ஜியோஹாட்ஸ்டாருக்கான சந்தா 90 நாள்கள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே ஜியோ சிம் வைத்துள்ளவர்கள் அல்லது புதிதாக ஜியோ சிம் பெறுபவர்கள் ரூ. 299 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதைச் செய்தால் 90 நாள்கள் வரை ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்படும். மார்ச் 17-க்கு முன்பு ரீசார்ஜ் செய்தவர்கள் கூடுதலாக ரூ. 100 என்கிற திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது.
கூடுதலாக ஜியோஃபைபர் அல்லது ஜியோஏர்ஃபைபர் பயனாளர்களுக்கு 50 நாள்கள் வரை ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்படும்.