700 டெஸ்ட் விக்கெட்டுகள்: ஆண்டர்சன் சாதனை!

இந்தச் சாதனையைப் படைக்கும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.
700 டெஸ்ட் விக்கெட்டுகள்: ஆண்டர்சன் சாதனை!
ANI

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தச் சாதனையைப் படைக்கும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

3-வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினார்கள். இங்கிலாந்திலிருந்து பஷீர் மற்றும் ஆண்டர்சன் பந்துவீசினார்கள். ஆண்டர்சன் தனது இரண்டாவது ஓவரில் குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 700 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையை அவர் எட்டினார். மைதானத்தில் ஆண்டர்சனின் பெற்றோர்கள் இருந்தார்கள். அவர்களை நோக்கி பந்தைக் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் ஆண்டர்சன் தற்போது 3-வது இடத்தில் உள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களில் இவருக்கு அடுத்து இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட் 604 விக்கெட்டுகளுடன் உள்ளார்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:

  1. முத்தையா முரளிதரன் - 800

  2. ஷேன் வார்ன் - 708

  3. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 700*

  4. அனில் கும்ப்ளே - 619

  5. ஸ்டுவர்ட் பிராட் - 604

  6. கிளென் மெக்ராத் - 563

  7. நேதன் லயான் - 527*

  8. கோர்ட்னி வால்ஷ் - 519

  9. ரவிச்சந்திரன் அஸ்வின் - 511*

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in