ஐஎஸ்எல் கால்பந்து: வீரர்களுக்கான ஊதியத்தை நிறுத்த பெங்களூரு எஃப்சி முடிவு | Bengaluru FC

ஆகஸ்ட் 7 அன்று ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பங்கெடுக்கும் 8 கிளப் அணிகளின் தலைமைச் செயலர்களுடன் அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு முக்கியக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து: வீரர்களுக்கான ஊதியத்தை நிறுத்த பெங்களூரு எஃப்சி முடிவு | Bengaluru FC
ANI
1 min read

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் எதிர்காலம் குறித்து தெளிவு இல்லாததால், வீரர்களுக்கான ஊதியத்தை நிறுத்திவைக்க பெங்களூரு எஃப்சி அணி முடிவு செய்துள்ளது.

அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) மற்றும் ரிலையன்ஸால் நடத்தப்பட்டு வரும் கால்பந்து விளையாட்டு மேம்பாடு லிமிடெட் () இடையிலான வேறுபாடு காரணமாக ஐஎஸ்எல் போட்டியின் அடுத்த பருவம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. மாஸ்டர் உரிமங்கள் ஒப்பந்தம் தொடர்பாக வேறுபாடு நிலவி வருவதாகத் தெரிகிறது. இதுதொடர்புடைய வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தக் குழப்பத்தால் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் எதிர்காலம் குறித்து தெளிவு கிடைக்காததால், வீரர்கள் மற்றும் அணியின் ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுத்திவைக்க பெங்களூரு எஃப்சி அணி முடிவு செய்துள்ளது. நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரி இந்த அணியில் தான் இடம்பெற்றுள்ளார். எனினும் இந்த முடிவால் இந்தியாவில் கால்பந்தை வளர்ப்பது மற்றும் இளம் வீரர்களுக்கான கால்பந்து பள்ளிகளை வளர்ப்பதில் எந்த மாற்றமும் நிகழாது என பெங்களூரு எஃப்சி தெளிவுபடுத்தியுள்ளது.

வீரர்களுக்கான ஊதியத்தை நிறுத்திவைப்பதில் பெங்களூரு எஃப்சி அணி முதல் அணி அல்ல. ஏற்கெனவே ஒடிஷா எஃப்சி அணி கடந்த வாரம் இதே அறிவிப்பை வெளியிட்டது.

இந்தக் குழப்பங்கள் காரணமாக, வரும் ஆகஸ்ட் 7 அன்று ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பங்கெடுக்கும் 8 கிளப் அணிகளின் தலைமைச் செயலர்களுடன் அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு முக்கியக் கூட்டத்தை நடத்தவுள்ளது.All India Football Federation

Bengaluru FC | ISL | India Super League | AIFF | Master Rights Agreement | Football Sports Development Limited | All India Football Federation | FSDL | MRA Agreements

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in