துலீப் கோப்பை: இஷான் கிஷன் சதம்!

முன்னதாக, புச்சி பாபு போட்டியிலும் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.
இஷான் கிஷன்
இஷான் கிஷன் ANI
1 min read

துலீப் கோப்பையின் 2-வது சுற்றில் இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

துலீப் கோப்பை செப். 5 அன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியா பி அணி இந்தியா ஏ அணியையும், இந்தியா சி அணி இந்தியா டி அணியையும் வீழ்த்தின.

இந்நிலையில் 2-வது சுற்று இன்று தொடங்கியது. இதில் இந்தியா சி - இந்தியா பி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 126 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் எடுத்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா இந்திரஜித் 78 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக, புச்சி பாபு போட்டியில் கலந்து கொண்ட இஷான் கிஷன் 86 பந்துகளில் சதமடித்து அசத்தினார். காயம் காரணமாக துலீப் கோப்பையின் முதல் சுற்றில் இவர் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது துலீப் கோப்பையில் சதம் அடித்துள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் 2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தியுள்ள நிலையில் இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in