நடப்பாண்டு புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் களமிறங்கவுள்ளார்.
புச்சி பாபு கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று தொடங்குகிறது. செப்டம்பர் 11 வரை நடைபெறும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மும்பை, டிஎன்சிஏ லெவன் உட்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன.
இப்போட்டி திருநெல்வேலி, சேலம், கோவை மற்றும் நத்தம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இதில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் களமிறங்கவுள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் விளையாடிய இஷான் கிஷன் நாளை (ஆகஸ்ட் 14) ஜார்க்கண்ட் அணியுடன் இணையவுள்ளார்.
புச்சி பாபு போட்டியில் பங்கேற்க தானாக முன்வந்த இஷான் கிஷன், நடப்பாண்டு ரஞ்சி கோப்பையிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டிருந்தார்.