டி20 உலகக் கோப்பை: அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளின் சீருடையில் கர்நாடக நிறுவனத்தின் விளம்பரம்

கன்னட எழுத்துக்களுடன் கூடிய விளம்பரம் இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளின் சீருடையில் கர்நாடகாவின் 'நந்தினி' நிறுவன விளம்பரம்
அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளின் சீருடையில் கர்நாடகாவின் 'நந்தினி' நிறுவன விளம்பரம்@kmfnandinimilk

கர்நாடகாவின் 'நந்தினி' நிறுவனத்தின் விளம்பரம் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து டி20 உலகக்கோப்பை அணிகளின் சீருடையில் கன்னட எழுத்துக்களுடன் இடம்பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளின் சீருடையில் கன்னட எழுத்துக்களுடன் கூடிய கர்நாடகாவின் 'நந்தினி' நிறுவன விளம்பரம் இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெங்களூருவில் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 'நந்தினி' என்கிற நிறுவனம் பால் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 'நந்தினி' நிறுவனம் டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளின் அதிகாரபூர்வ விளம்பரதாரர்களாக இருக்கப்போவதாக அறிவித்தனர்.

இது குறித்து 'நந்தினி' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், “டி20 உலகக் கோப்பையில் விளம்பரதாரர்களாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 40 வருடங்களாக 'நந்தினி' நிறுவனம் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலும் உற்பத்தி மற்றும் விற்பனையை தொடங்கியுள்ளோம். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளம்பரதாரர்களாக இருப்பதால், எங்களின் நிறுவனத்தை உலகம் முழுக்க விரிவுபடுத்த அது உதவும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in