ஐபிஎல் மீது ஆர்சிபி முன்னாள் உரிமையாளர் குற்றச்சாட்டு!

"அந்தக் காணொளி என்னைப் பற்றிய காணொளி. என் உணர்வுகளைப் பற்றிய காணொளி."
ஐபிஎல் மீது ஆர்சிபி முன்னாள் உரிமையாளர் குற்றச்சாட்டு!
படம்: https://www.instagram.com/sidmallya
1 min read

ஐபிஎல் நிர்வாகம் மீது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா. இவருடைய மகன் சித்தார்த் மல்லையா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றவுடன், கண்கலங்கியபடி உணர்வுபூர்வமான காணொளியை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சித்தார்த் மல்லையா. ஆர்சிபியின் வெற்றித் தருணம் சித்தார்த் மல்லையாவின் பின்னால் இருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

18 ஆண்டுகால காத்திருப்புக் பின் இதைப் பார்க்க முடிந்ததாக அந்தக் காணொளியில் உணர்ச்சிவயப்பட்டு பேசியிருந்தார் சித்தார்த் மல்லையா.

இதைத் தொடர்ந்து தான் பேசிய செல்ஃபி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் சித்தார்த் மல்லையா. இதில் ஐபிஎல் மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.

"ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி இறுதியாக வென்றவுடன் நான் மிகவும் உணர்வுபூர்வமாக வெளியிட்ட காணொளியைப் பார்த்திருப்பீர்கள். பலர் கலந்துரையாடினீர்கள், லைக் செய்து கமெண்ட் செய்தீர்கள், காணொளியைப் பகிர்ந்திருந்தீர்கள். ஆனால் சில காரணங்களுக்காக இன்ஸ்டகிராம் அந்தக் காணொளியை நீக்கியது. அடுத்த சில நாள்களுக்கு ரசிகர்களுடன் கலந்துரையாட தடையும் விதிக்கப்பட்டது. இந்தத் தடை ஒருவழியாக நீக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்தபோது, காப்புரிமை விதிகளை மீறியதாக ஐபிஎல் அளித்த புகாரின் பெயரில் காணொளி நீக்கப்பட்டுள்ளது. இதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. 1 நிமிடத்துக்கும் குறைவான காணொளி அது. சரி, எனக்குப் பின்னால் திரை இருந்தது. அதில் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், அந்தக் காணொளி என்னைப் பற்றிய காணொளி. என் உணர்வுகளைப் பற்றிய காணொளி. காணொளியை நீக்கியது மட்டுமில்லாமல் ரசிகர்களுடன் உரையாடுவதற்கான கொண்டாடுவதற்கான வாய்ப்பையும் பறித்தது வியப்பாக உள்ளது. இது எனக்கு வருத்தமளித்தது" என்றார் சித்தார்த் மல்லையா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in