ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹெயின்ரிக் கிளாசென் அதிக தொகைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்துக்கு முன்பு ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் தலா 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்தது. தக்கவைத்துள்ள வீரர்களின் விவரங்களை வெளியிட இன்று இறுதி நாள். இதன்படி ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரங்களை மாலை 5.30 மணி முதல் வெளியிடத் தொடங்கின.
இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹெயின்ரிக் கிளாசென் அதிகபட்சமாக ரூ. 23 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸால் நிகோலஸ் பூரன் ரூ. 21 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் விராட் கோலி ரூ. 21 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். அதிக தொகைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ள இந்திய வீரராக விராட் கோலி உள்ளார்.
அதிக தொகைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
ஹெயின்ரிக் கிளாசென் (சன்ரைசர்ஸ்) - ரூ. 23 கோடி
விராட் கோலி (ஆர்சிபி) - ரூ. 21 கோடி
நிகோலஸ் பூரன் (லக்னெள) - ரூ. 21 கோடி
ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே) - ரூ. 18 கோடி
ரவீந்திர ஜடேஜா (சிஎஸ்கே) - ரூ. 18 கோடி
பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ்) - ரூ. 18 கோடி
சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்) - ரூ. 18 கோடி
யஷஸ்வி ஜெயிஸ்வால் (ராஜஸ்தான்) - ரூ. 18 கோடி
ரஷித் கான் (குஜராத்) - ரூ. 18 கோடி
ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) - ரூ. 18 கோடி