ஐபிஎல் பிளே ஆஃப்: எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

56 ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஒரு அணி கூட பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை.
ஐபிஎல் பிளே ஆஃப்: எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?
ஐபிஎல் பிளே ஆஃப்: எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?ANI

நடப்பு ஐபிஎல் பருவத்தில் 14 ஆட்டங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது என்பதைப் பார்க்கலாம்.

ஐபிஎல் தொடங்கி 56 ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஒரு அணி கூட பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. அதேபோல எந்த ஒரு அணியும் இன்னும் வெளியேறவில்லை. புள்ளிகள் பட்டியலில் தலா 16 புள்ளிகளுடன் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் தலா 3 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் அதில் ஒன்று அல்லது இரண்டில் வெற்றி பெற்றாலே இவ்விரு அணிகளும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறும். புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பும் இவ்விரு அணிகளுக்கே அதிகம் உள்ளது.

அடுத்ததாக 12 புள்ளிகளுடன் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், தில்லி மற்றும் லக்னௌ அணிகள் முறையே 3-6 இடங்களில் உள்ளனர். இதில் தில்லி அணிக்கு மட்டும் இரண்டு ஆட்டமே மீதமுள்ளது. மற்ற மூன்று அணிகளுக்கும் 3 ஆட்டங்கள் உள்ளன. இன்று நடைபெறும் லக்னௌ - சன்ரைசர்ஸ் ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான ஆட்டம். இந்த 4 அணிகளும் இனி வரும் ஆட்டங்களில் குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும். இதில் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலம் என்றால் அது ரன் ரேட் தான். மற்ற அணிகளை விட முன்னிலையில் சிஎஸ்கே அணிக்கு ரன் ரேட் இருப்பதால் 3-ல் 2 வெற்றிகளை பெற்றாலே சென்னை அணிக்கு போதுமானதாக இருக்கும். ஒருவேளை இதில் எந்த அணியும் 14 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும். சிஎஸ்கே தவிர மற்று மூன்று அணிகளும் இனி வரும் ஆட்டங்களில் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். ஏனென்றால் இந்த மூன்று அணிகளுக்கும் ரன் ரேட் மிகவும் குறைவாக உள்ளது

8 புள்ளிகளுடன் கடைசி 4 இடங்களில் இருக்கும் அணிகள்: ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, குஜராத்

ஏதேனும் மாயாஜாலம் நிகழ்ந்தால் மட்டுமே இந்த 4 அணிகளுக்கு பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பிருக்கும். இந்த அணிகளை பொறுத்தவரை இனி இவர்கள் விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் இமாலய வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அவை அனைத்தும் ஒரு அணிக்கு சாதகமாக நடக்கும் பட்சத்தில் இந்த 4 அணிகளில் ஏதேனும் ஒரு அணியாவது அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

@ipl

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in