ஐபிஎல் 2024-ல் அதிக விக்கெட்டுகள்: முதலிடத்தில் தமிழக வீரர் நடராஜன்

8 ஆட்டங்களில் விளையாடி நடராஜன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நடராஜன்
நடராஜன்@SunRisers
1 min read

நடப்பு ஐபிஎல் பருவத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் பட்டியலில் நடராஜன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐபிஎல் 2024-ன் 50-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதின. கடைசிப் பந்து வரை சென்ற இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடராஜன் சிறப்பாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்த ஐபிஎல்-லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் பட்டியலில் நடராஜன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 8 ஆட்டங்களில் விளையாடி நடராஜன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக பும்ரா முதலிடத்தில் இருந்தார்.

பும்ரா 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்திலும், சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிஸுர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்தில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடராஜன் அணியில் இடம்பெறாதது பேசுபொருளாக மாறியது. நடப்பு ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in