
ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரராக ரூ. 6.25 கோடிக்கு கான்வேவை தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்று ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். பிரபல வீரர்கள் பட்டியலிலிருந்து ஏலம் தொடங்கியது.
சிஎஸ்கே அணி முதல் வீரராக கான்வேவை ரூ. 6.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
ஏற்கெனவே 2022, 2023 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே கடந்த ஆண்டு காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் கான்வே இடம்பெறாத நிலையில் மெகா ஏலத்தில் ரூ. 6.25 கோடிக்கு சிஎஸ்கே அணியால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்ததாக ராகுல் திரிபாதியை ரூ. 3.40 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை ஆர்டிஎம் முறை பயன்படுத்தி ரூ. 4 கோடிக்கும் சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது.