ஐபிஎல் மெகா ஏலம்: குஜராத் அணியில் ரபாடா!

பஞ்சாப் கிங்ஸ் அணி ரபாடாவுக்கு ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.
ஐபிஎல் மெகா ஏலம்: குஜராத் அணியில் ரபாடா!
ANI
1 min read

ஐபிஎல் மெகா ஏலத்தில் தெ.ஆ. வீரர் ரபாடா ரூ. 10.75 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்றும் (நவம்பர் 24) நாளையும் (நவம்பர் 25) ஜெட்டாவில் நடைபெறுகிறது. மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். பிரபல வீரர்கள் பட்டியலிலிருந்து ஏலம் தொடங்கியது.

இதன்படி முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்ட அர்ஷ்தீப் சிங் ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பிறகு தெ.ஆ. வீரர் ரபாடாவுக்கு ஆர்சிபி, குஜராத் டைடன்ஸ் இடையே போட்டி நிலவியது.

முடிவில், ரபாடா ரூ. 10.75 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி ரபாடாவுக்கு ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தவில்லை.

logo
Kizhakku News
kizhakkunews.in